இரவுக் கழுகு, காமிக்ஸ் சாகச நாயகன் டெக்ஸ் வில்லரின் பட்டப் பெயர். லயன், முத்து காமிக்ஸ் புத்தகங்களில் தோன்றி ஆயிரக்கணக்கானோரின் இளமைப் பருவத்தை வளப்படுத்திய கௌபாய் டெக்ஸ் வில்லர்.
அப்பேர்ப்பட்டதோர் நாயகனின் பெயரைத் தாங்கி வந்திருக்கிறது ஒரு வலைப்பதிவு. காமிக்ஸ் படிப்பவர்களுக்கும் தெரியாத பல சுவையான தகவல்கள் இதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கிளறிவிட்டிருக்கிறது இரவுக் கழுகு.