உண்மையான பாதை
நினாகாவா காலமாவதற்குச் சற்று முன்பு ஜென் ஆசிரியர் இக்கியு அவரைப் பார்க்க வந்தார். “உங்களை நான் அழைத்துப் போகவா?” என்று கேட்டார் இக்கியு.
“நான் இங்கு தனியாகத்தான் வந்தேன், தனியாகத்தான் போகிறேன். உங்களால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டார் நினாகாவா.
அதற்கு இக்கியு இவ்வாறு பதிலளித்தார்: “நீங்கள் நிஜமாகவே வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதாக நினைக்கிறீர்கள் என்றால் அது உங்கள் பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதையை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.”
இக்கியு இந்தச் சொற்களால் பாதையை மிகத் தெளிவாகக் காண்பிக்கவே, நினாகாவா புன்னகைத்து இறந்தார்.
- - -
பாக்கி நூறு இங்கே.
thala suthuthu
பொழிப்புரை:
“உம் மண்டையில் ஒன்று போட்டு உம்மைப் பரலோகத்திற்கு அனுப்புகிறேன்” என்றார் இக்கியு.
இப்ப புரியுதா?