லிங்க்கர் | Linkr

லிங்க்குகளில் உள்ளதடா இணையம்

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 வலை உலாவியை இறக்கிக்கொள்ள விரும்புபவர்கள் (அப்படி யாராவது இருந்தால்) Windows Genuine Advantage (WGA) சோதனை எதுவும் இல்லாமல் அதை இறக்கிக்கொள்ளலாம்.

பாதுகாப்பு பிரச்சினை என்று மைக்ரோசாஃப்ட் கதை விடுகிறது. ஆனால் ஃபயர்ஃபாக்ஸின் வளர்ச்சியைப் பார்த்து பீதியடைந்துதான் பெரியண்ணன் திடீர் உபசாரம் செய்கிறார் என்பது தெளிவு.

CNET செய்தி

கூகிளின் ஜிஃபோன் இதோ வருகிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தைவானிய நிறுவனமான ஹெச்.டி.சி. 20 மாடல்களைத் தயாரிக்கப்போவதாகவும் பேச்சு. இதற்கிடையில் நிஜம் போலவும் ஃபோட்டோஷாப் போலவும் வந்த சில ‘ஜிஃபோன் படங்கள்’ (பெரிதாக்கிப் பாருங்கள்)…

gphone1.jpg

gphone7.jpg

 gphone3.jpg

gphone2.jpg

gphone4.jpg

gphone5.jpg

gphone6.jpg

மைஸ்பேஸ் சேவையை வசதியில்லாத இளைஞர்களே அதிகம் பயன்படுத்துகிறார்கள்; ஃபேஸ்புக்கை வசதியானவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்கிறது இந்தக் கட்டுரை.

மைக்ரோசாஃப்ட்டின் ‘பரப்புக் கணினி’யைக் கிண்டல் செய்கிறார்கள்… நன்றி: TechCrunch

Kyte.tv பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நோக்கியா இதில் முதலீடு செய்திருக்கிறது என்று எங்கோ படித்ததும் போய்ப் பார்த்தேன். Kyte என்ற அதன் பக்காவான மொபைல் மென்பொருளை என் மொபைலில் நிறுவிக்கொண்டேன். என்னுடைய படு சுமாரான GPRS இணைப்பிலேயே பரவாயில்லாமல் தெரிந்தது வீடியோ. ஆனால் ஸ்டாம்ப் சைஸில்.

கைட் வலையகம் மற்ற வீடியோ பகிர்வு வலையகங்களை விட நன்றாக இருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம். நோக்கியாவின் பலத்தில் கைட் மொபைல் யூட்யூப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.

நான் செய்த ஸ்லைட் ஷோ

ஸ்பாமர்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட Captcha தொழில்நுட்பத்திற்கு வயதாகிவிட்டது. அதைப் பயன்படுத்திவந்த eBay, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் வேறு வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. என்கிறது இந்த சிநெட் நியூஸ் கட்டுரை.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் 4 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரம் ஹிட்ஸ் கிடைக்கும் அளவிற்குப் பிரபலம் இந்த வலைப்பதிவு.

PostSecret ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான பேரின் பங்களிப்பில் நடத்தப்படும் வலைப்பதிவு.

அத்தனை பேரும் தாங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத ரகசியங்களை ஒரு போஸ்ட்கார்டில் அனுப்புகிறார்கள்.

PostSecretஇந்த போஸ்ட்கார்டுகள் பெரும்பாலும் அவர்களே தங்கள் கைவண்ணத்தில் தயாரித்தவையாக இருக்கும். ரகசியத்திற்கு சமமான முக்கியத்துவத்தை கற்பனைக்கும் தரச் சொல்கிறார்கள் என்பதால் பதிவுகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. இவற்றை கொலாஜ் வகையறாவில் சேர்க்கலாம்.

ரகசியங்கள் “நான் என் தோழியின் காதலனுடன் படுத்தேன்” என்பதிலிருந்து “நீ பரீட்சையில் தோற்றுப் போனதற்கு நான் சந்தோஷப்பட்டேன்” என்பது வரை பல வகை.