September 29, 2006 at 8:03 pm | வடிவமைப்பு, இலவசம்
- ஆக்குநர்: சாத்தான் |
மேலே தலைப் படம் (header) மாறிவிட்டதைப் பார்த்தீர்களா? இலவச ஸ்டாக் ஃபோட்டோ உபயம்தான்.
தேடிய இடம் everystockphoto. அது என்னை stock.xchng-இல் கொண்டு போய் விட்டது. இந்த ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இலவசமாக உறுப்பினர் ஆகி எவ்வளவு படங்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
yotophoto கூட உண்டு. ஆனால் கொஞ்சம் ஸ்லோ.
September 29, 2006 at 7:52 pm | வடிவமைப்பு, வலைப்பதிதல், இலவசம்
- ஆக்குநர்: சாத்தான் |
வேர்ட்பிரஸ்காரர்கள் Kubrick தீமுக்கு ஹெடர் படத்தை மாத்திக்குங்கடா என்று சொல்லிவிட்டார்கள்.
குப்ரிக் தீமைப் போட்டிருப்பவர்களுக்காக ஹெடர் படங்களை இலவசமாகத் தருகிறார் ஒருவர். இவர் ஒரு திறமை மிகு டிஜிட்டல் கலைஞர். நம்மூர்க்காரர்.
ஹெடர்கள் இருக்கும் இடம்.
September 28, 2006 at 8:12 pm | இலவசம், சினிமா
- ஆக்குநர்: சாத்தான் |
ஹாலிவுட்டில் எல்லா படமும் குப்பை இல்லை. சினிமா என்ற கலையையும் மனித மூளையின் திறனையும் மதித்தும் சில படங்கள் வருகின்றன.
எந்த மாதிரிப் படமாக இருந்தாலும் திரைக்கதையை டவுன்லோட் செய்து படிக்க இங்கே போகலாம் (ஹிட்ச்காக், அன்டோனியோனி வகையறா கூடக் கிடைக்கிறது).
லூசு மாதிரி லே அவுட் போட்டிருக்கிறார்கள்.
September 25, 2006 at 9:05 pm | இலவசம், சேவை
- ஆக்குநர்: சாத்தான் |
ஆர்க்குட், மைஸ்பேஸ் போல இந்தியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சைட் minglebox. வயசுப் பசங்களுக்கு (பொண்ணுங்க included) மட்டும்.
டெம்ப்ளேட் இல்லாத வலைப்பதிவுகள், வலைப்பக்கங்கள், புகைப்பட ஆல்பங்கள், மின்குழுக்கள் போன்றவை இலவசம். டிசைனை மாற்றினால் இன்னும் கொஞ்சம் பேர் உள்ளே நுழைந்து பார்ப்பார்கள்.
September 23, 2006 at 9:44 pm | இலவசம், கணினி
- ஆக்குநர்: சாத்தான் |
கணினியில் 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அழகான பெண் உருவங்களை உருவாக்குவதற்காகவே ஒரு பத்திரிகை! The most beautiful CG girls என்ற இந்தப் பத்திரிகையை இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். சுமார் 15 எம்.பி. பி.டி.எஃப். ஃபைல். பிரமிப்பூட்டும் படங்கள்!
September 17, 2006 at 2:28 pm | இலவசம், சேவை, கணினி
- ஆக்குநர்: சாத்தான் |
இணையமானது ஃப்ளிக்கர், நெட்வைப்ஸ் வரை வந்துவிட்டாலும் டெல்நெட்டை miss பண்ணுபவர்கள் அநேகர்.
இப்போதும் பலர் தங்கள் சர்வர்களை டெல்நெட் மூலம் இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கிறார்கள். அதில் ஒன்று Grex.
இங்கே பதிவு செய்துகொள்பவர்களுக்கு @cyberspace.org என்ற அட்டகாசமான மின்னஞ்சல் முகவரியும் கிடைக்கும் (உங்களுக்கு சகட்டுமேனிக்கு ஈ-மெயில் வந்து குவியும் என்றால் ஜிமெயிலோடு நிற்க).
வலையகத்தில் பதிவு செய்துகொண்ட பிறகுதான் கிரெக்ஸில் டெல்நெட் செய்ய முடியும்.
கிரெக்ஸ் ஒரு தனி உலகம். இதில் பல தலைப்புகளில் புல்லட்டின் போர்டுகள் இருக்கின்றன. மின்னஞ்சல் அனுப்ப/பெற, வலையுலாவ, குறிப்புகள் எழுத PINE, Lynx, pico, vi, emacs, joe எல்லாம் உண்டு. சாதா மெனு பிடிக்கவில்லை என்றால் csh, BASH, ksh முதலான யுனிக்ஸ் ஷெல்கள் இருக்கின்றன. பக்கா விண்டோஸ் பயனர்கள் கூட உள்ளே நுழைந்து உதவிக் குறிப்புகளைப் படித்துக் கற்றுக்கொள்ளலாம்.
கிரெக்ஸ் மூலமோ தனியாகவோ விசிட் அடிக்கப் பல டெல்நெட் முகவரிகளை telnet.org-இல் பார்க்கலாம்.
டெல்நெட் செய்ய விண்டோஸ் டெல்நெட்டைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று தலையெழுத்தில்லை. அதற்கு PuTTY என்று ஒரு சின்ன மென்பொருள் இருக்கிறது. சில டெல்நெட் சர்வர்களில் ssl லாகின் மூலம்தான் நுழைய முடியும். அதற்குத்தான் புட்டி. இதை இன்ஸ்டால் எல்லாம் செய்யத் தேவையில்லை.
இன்னொரு இடத்தையும் டெல்நெட்டில் பயன்படுத்தலாம்: telnet://freeshell.org. இங்கும் இலவச ஈ-மெயில் உண்டு (Mutt) - அதே கட்டுப்பாட்டு விதிகளுடன். ஒரு ஸ்க்ரீன்ஷாட் -
