லிங்க்கர் | Linkr

லிங்க்குகளில் உள்ளதடா இணையம்

நாஜிகளின் பிடியில் டொனால்டு டக் மாட்டிக்கொண்டு படும் பாட்டை இந்த வால்ட் டிஸ்னி அனிமேஷன் படத்தில் கண்டு களிக்கலாம்.

1943இல் நாஜிகளுக்கு எதிரான பிரச்சாரப் படம் இது. ஆஸ்கர் விருது கூட வாங்கியிருக்கிறது. எட்டு நிமிட வீடியோ. நல்ல டைம் பாஸ்.

Der Fuehrer’s Face

ஹாலிவுட்டிலிருந்து மிக அபூர்வமான படங்கள் எல்லாம் வந்திருக்கின்றன. 70களில் இருந்த நார்மா ரே என்ற தொழிற்சங்கத் தலைவர் பற்றிய Norma Rae என்ற படத்தைப் பற்றிய இந்தக் கட்டுரையைப் பார்த்தால் ஹாலிவுட்டில் தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் இடமிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

இது எஸ். ஆனந்த் என்பவர் எழுதிய பழைய கட்டுரை. ஆனால் இதில் இவர் அழுத்தமாகவும் அமர்க்களமாகவும் எடுத்துச் சொல்லும் விஷயங்கள் நீண்ட காலம் நிற்கும்.

அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் ஆமீர் கான் நடித்த ‘லகான்’ படத்தின் விமர்சனம் போலவும் பொதுவாக கிரிக்கெட்டின் ஜாதி அரசியல் பற்றியும் எழுதப்பட்ட மிக நீண்ட கட்டுரை. ஆனந்த் அவுட்லுக் பத்திரிகையில் வேலை பார்க்கிறார்.

கட்டுரையில் ஆங்காங்கே பல சாட்டையடிகளைப் பார்க்கலாம். உதாரணமாக -

A ‘liberal-secular’ newspaper which has no qualms calling itself The Hindu…

Just brilliant!

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இருக்கும் ‘த லாஸ்ட் கிங் ஆஃப் ஸ்காட்லண்ட்’, வெள்ளைக்காரர்களுக்காக வெள்ளைக்காரர்கள் எடுத்திருக்கும் கதை என்கிறார் ஒரு விமர்சகர் (படத்தை நான் பார்க்கவில்லை).

வெள்ளைக்காரர்கள் வெள்ளையரல்லாதவர்களிடம் இரக்கப்பட்டு அவர்களுக்காகப் போராடுவதாகக் காட்டும் படங்களைப் பட்டியலிடுகிறார் வனெசா வால்டர்ஸ் - To Kill a Mockingbird, A Time to Kill, Cry Freedom…

லாஸ்ட் கிங்கும் இந்த வகையில் ஒரு வெள்ளை மனிதநேயப் படம்தானே, அதை ஏன் யாருமே சுட்டிக்காட்டுவதில்லை என்று கேட்கிறார் வனெசா. பதில் தெரிந்து கேட்கப்படும் கேள்வி.

ஓட்டல் ருவாண்டா மாதிரி படங்களை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது…

ஹாலிவுட்டில் எல்லா படமும் குப்பை இல்லை. சினிமா என்ற கலையையும் மனித மூளையின் திறனையும் மதித்தும் சில படங்கள் வருகின்றன.

எந்த மாதிரிப் படமாக இருந்தாலும் திரைக்கதையை டவுன்லோட் செய்து படிக்க இங்கே போகலாம் (ஹிட்ச்காக், அன்டோனியோனி வகையறா கூடக் கிடைக்கிறது).

லூசு மாதிரி லே அவுட் போட்டிருக்கிறார்கள்.

ஐரோப்பியர் பால் கிரீன்கிராஸ் இயக்கிய யுனைட்டட் 93 படத்தில் (9/11 பயங்கரவாதத் தாக்குதல் பற்றியது) அமெரிக்க இனவாத அரசியல் புகுந்து விளையாடுகிறது என்கிறார் ஒரு வலைப்பதிவர். ஹாலிவுட் படங்களில் அரசியலுக்கா பஞ்சம்?

United 93: A slanderous movie!

என்னை அழ வைப்பதுதான் உங்கள் நோக்கமா? - தமிழ் வலைப்பதிவுக்குத் தந்த பேட்டியில் அஜித் எமோசனல்!