October 8, 2007 at 6:15 pm | இலவசம், பிசினஸ், இணைய கலாச்சாரம், கணினி, தகவல், செய்தி, வரலாறு
- ஆக்குநர்: சாத்தான் |
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 வலை உலாவியை இறக்கிக்கொள்ள விரும்புபவர்கள் (அப்படி யாராவது இருந்தால்) Windows Genuine Advantage (WGA) சோதனை எதுவும் இல்லாமல் அதை இறக்கிக்கொள்ளலாம்.
பாதுகாப்பு பிரச்சினை என்று மைக்ரோசாஃப்ட் கதை விடுகிறது. ஆனால் ஃபயர்ஃபாக்ஸின் வளர்ச்சியைப் பார்த்து பீதியடைந்துதான் பெரியண்ணன் திடீர் உபசாரம் செய்கிறார் என்பது தெளிவு.
CNET செய்தி
October 7, 2007 at 2:40 pm | வடிவமைப்பு, கணினி, தகவல், அறிவியல்
- ஆக்குநர்: சாத்தான் |
நூறு டாலர் லேப்டாப்பைக் கீழே போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மண்ணைக் கொட்டியெல்லாம் சோதிக்கிறார்கள். ரொம்ப ஹைடெக். UMPC, Ultramobile லேப்டாப், டாப்ளெட் வகையறாக்களுடன் ஒப்பிட்டால் இது பயங்கர சீப்.
காண்பீர்…
September 18, 2007 at 4:31 pm | இலவசம், கணினி, செய்தி, தகவல்
- ஆக்குநர்: சாத்தான் |
ஐ.பி.எம். நிறுவனம் இலவச, திறந்த மூல ஆஃபீஸ் மென்பொருள் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. ஒரு சொற்செயலி, ப்ரெசன்டேஷன் நிரல், ஸ்ப்ரெட்ஷீட் நிரல் ஆகியவை இதில் இருக்கின்றன. IBM Lotus Symphony இங்கே கிடைக்கிறது.
September 16, 2007 at 1:54 pm | வலைப்பதிவு, வடிவமைப்பு, வலைப்பதிதல், இலவசம், கணினி, சேவை, தகவல்
- ஆக்குநர்: சாத்தான் |
பிளாகருக்கு டெம்ப்ளேட் உருவாக்கித் தரும் வலைப்பக்கங்களைப் பார்த்திருப்பீர்கள். இது வேர்ட்பிரஸுக்கு.
கொஞ்சம் குழப்பமாக இருக்கும். உதவிக் குறிப்புகளைப் படித்துக்கொள்க.
September 10, 2007 at 5:24 pm | வலைப்பதிவு, மொபைல், இலவசம், சேவை, கணினி, விளையாட்டு, தகவல்
- ஆக்குநர்: சாத்தான் |
உங்கள் மொபைலானது Symbian, Windows Mobile மாதிரி ஒரு இயக்குதளத்தில் இயங்கினால், அதில் ஓரளவு நல்ல GPRS இணைப்பு இருந்தால், இந்த மென்பொருளை வைத்து ஒரு புரட்சியையே செய்துகொள்ளலாம்.
மொபைலுக்கான விட்ஜெட்களை வழங்குகிறது WidSets . விட்ஜெட்கள் எனப்படுபவை குட்டி நிரல்கள். அவற்றுக்கு விட்செட்ஸ்தான் பிளாட்ஃபார்ம் போல் இயங்குகிறது.
விக்கிபீடியா, பி.பி.சி. செய்திகள், IMDB போன்ற மிகப் பிரபலமான விட்ஜெட்கள் இருக்கின்றன. இவற்றின் வேலை, அந்தந்த சைட்களிலிருந்து தகவலைக் கொண்டுவந்து தருவது. சுடோக்கு மாதிரி விளையாட்டுகளும் இருக்கின்றன. ஃப்ளிக்கரில் சில குறிச்சொற்களில் வரும் படங்களுக்கும் தனியாக விட்ஜெட்கள் உண்டு.
விட்ஜெட்களை செய்திகள், அரட்டை, கேளிக்கை, விளையாட்டு, இசை, வலைப்பதிவுகள் உட்பட பல வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். சாதா பட்டியல், பிரபலமானவை பட்டியல் என்று இரண்டு இருக்கின்றன. எதில் போனாலும் விட்ஜெட்டின் மேல் க்ளிக் செய்தால் விவரம் தெரியும். Pick-ஐ அழுத்தினால் உங்கள் விட்செட் முகப்பில் சேர்ந்துவிடும்.
இதில் ஒரு பியூட்டி, உங்கள் மொபைலில் என்னென்ன சைட் எல்லாம் பார்க்க விரும்புகிறீர்களோ, அவற்றின் RSS முகவரியை அதன் வலையகத்தில் தந்து புதிய விட்ஜெட்களை உருவாக்கலாம் (முதலில் உறுப்பினர் ஆக வேண்டும்). உருவாக்கும் வேலையை மட்டும் அவர்கள் வலையகத்தில் செய்ய வேண்டும்.
அடிப்படையான பல செய்தி வலையகங்களும் வலைப்பதிவுகளும் முன்பே விட்ஜெட் ஆக்கப்பட்டிருக்கும் என்பதால் நீங்கள் புதிதாக உருவாக்கத் தேவையில்லை. புதிய விட்ஜெட்களை உருவாக்கத் இரண்டு விஷயங்கள் தேவை: 1. RSS முகவரி, 2. விட்ஜெட்டுக்கு லோகோவாக ஏதாவது ஒரு படம் (இதை ஏன் கட்டாயம் என்று தெரியவில்லை; டீபால்டு இமேஜ் எதையாவது போட வேண்டியதுதானே). விளையாட்டு, அரட்டை போன்ற விட்ஜெட்களை நான் முயற்சி செய்து பார்க்கவில்லை.
விட்செட்ஸ் உங்கள் மொபைலில் எத்தனை கிலோபைட்/மெகாபைட் தரவை மொபைலுக்கு இறக்கியது என்ற விவரத்தை Traffic என்ற இணைப்பை அழுத்தித் தெரிந்துகொள்ளலாம். மொபைலில் அவ்வப்போது விட்ஜெட்களின் உள்ளடக்கத்தைப் புதுப்பிக்கலாம். மொபைல் பில்லைப் பற்றிக் கவலை இல்லை என்றால் 325 விட்ஜெட்கள் கூட வைத்துக்கொள்ளும் வசதி உண்டு.
ஆனால் இது தரவைச் சுருக்கித்தான் தருகிறது. இந்த புரோகிராம் எல்லாவற்றையும் சில நொடிகளில் செய்துவிடுகிறது. நல்ல மொபைல் feed reader கிடைக்காமல் அலுவலக இருக்கையில் உழல்பவர்களுக்கும் இது நல்ல தீர்வு.
சில பற்றாக்குறைகள் இருக்கின்றன - உதாரணமாக, More போட்டுத் தடுக்கப்படாத வலைப்பதிவுகளின் முழு இடுகைகளையும் படிக்க முடிகிறது, ஆனால் மறுமொழிகளுக்குத் தனி விட்ஜெட்களைத்தான் உருவாக்க வேண்டும். இது பீட்டா பதிப்பு. அடுத்ததில் பல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். மொபைலுக்கு இது ஒரு கொலைகாரப் பயன்பாடு (killer app) என்பதில் சந்தேகமில்லை என்று கூறி…
September 9, 2007 at 12:22 pm | தகவல், நகைச்சுவை
- ஆக்குநர்: சாத்தான் |
September 3, 2007 at 5:56 pm | வடிவமைப்பு, பிசினஸ், இணைய கலாச்சாரம், செய்தி, தகவல்
- ஆக்குநர்: சாத்தான் |
கூகிளின் ஜிஃபோன் இதோ வருகிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தைவானிய நிறுவனமான ஹெச்.டி.சி. 20 மாடல்களைத் தயாரிக்கப்போவதாகவும் பேச்சு. இதற்கிடையில் நிஜம் போலவும் ஃபோட்டோஷாப் போலவும் வந்த சில ‘ஜிஃபோன் படங்கள்’ (பெரிதாக்கிப் பாருங்கள்)…






