மதுரையின் பாரம்பரியமிக்க ‘பர்ஸ் விளையாட்டு’ அழிந்துபட்ட கண்ணீர்க் கதையினைக் கேளீர்.
உண்மையான பாதை
நினாகாவா காலமாவதற்குச் சற்று முன்பு ஜென் ஆசிரியர் இக்கியு அவரைப் பார்க்க வந்தார். “உங்களை நான் அழைத்துப் போகவா?” என்று கேட்டார் இக்கியு.
“நான் இங்கு தனியாகத்தான் வந்தேன், தனியாகத்தான் போகிறேன். உங்களால் எனக்கு என்ன பயன்?” என்று கேட்டார் நினாகாவா.
அதற்கு இக்கியு இவ்வாறு பதிலளித்தார்: “நீங்கள் நிஜமாகவே வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பதாக நினைக்கிறீர்கள் என்றால் அது உங்கள் பிரமை. வருவதும் போவதும் இல்லாத பாதையை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.”
இக்கியு இந்தச் சொற்களால் பாதையை மிகத் தெளிவாகக் காண்பிக்கவே, நினாகாவா புன்னகைத்து இறந்தார்.
- - -
பாக்கி நூறு இங்கே.
இலக்கண, எழுத்துப் பிழைகளை வைத்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் காமிக்ஸ் துப்பறியும் நிபுணர் பேராசிரியர் ஸ்மித். இந்த இரண்டைத் தவிர வேறு எந்தக் குற்றமும் செய்யாதவர்களும் குற்றவாளிகள்தாம் என்கிறார் ஸ்மித்.
அமெரிக்காவின் இம்சை அரசன் அருளிய உளறல்களின் மேலான தொகுப்பு, வீடியோக்களுடன். ஓயாமல் அப்டேட் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் அங்ஙனமே செய்கிறார்கள்.
சாம்பிள்:
“That’s George Washington, the first president, of course. The interesting thing about him is that I read three—three or four books about him last year. Isn’t that interesting?”—Showing German newspaper reporter Kai Diekmann the Oval Office, Washington, D.C., May 5, 2006
பெண்ணைப் பொருளாகப் பார்ப்பது போர்னோ. பொருளைப் பெண்ணாகப் பார்ப்பது?
விடை.
ஆபீசில் உட்கார்ந்து (அல்லது நின்று) பார்க்காதீர்கள்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி ஷாம்பூ கண்ணில் பட்டால் எரியாது என்கின்றனர் நிறுவனத்தார். ஒருவர் அதைப் பரிசோதித்துப் பார்த்து கம்பெனிக்கு ஃபோன் செய்கிறார்.
I know that Johnson & Johnson is America’s most trusted company, but not to me. First of all, they’re named after the penis. Twice. You wouldn’t use a product called “Dr. Schlong Diaper Creme,” would you? Nor would you buy one of “Uncle Scrotum’s Plush Toys.”
அந்தத் தொலைபேசி உரையாடலை எம்.பி.3 ஃபைலாகத் தருகிறார்.
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது அவரைப் பற்றியும் நாஜிகளைப் பற்றியும் துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள் என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால் மரண தண்டனைதான்.
நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:
இரண்டு யூதர்கள் விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர் உத்தரவு வருகிறது.
ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: “பாத்தியா, அவங்களுக்கு குண்டெல்லாம் கொறஞ்சு போச்சு.”
இந்த வலைப்பக்கத்தில் இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன: “Did You Hear the One About Hitler?”