நூறு டாலர் லேப்டாப்பைக் கீழே போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, மண்ணைக் கொட்டியெல்லாம் சோதிக்கிறார்கள். ரொம்ப ஹைடெக். UMPC, Ultramobile லேப்டாப், டாப்ளெட் வகையறாக்களுடன் ஒப்பிட்டால் இது பயங்கர சீப்.
பிளாகருக்கு டெம்ப்ளேட் உருவாக்கித் தரும் வலைப்பக்கங்களைப் பார்த்திருப்பீர்கள். இது வேர்ட்பிரஸுக்கு.
கொஞ்சம் குழப்பமாக இருக்கும். உதவிக் குறிப்புகளைப் படித்துக்கொள்க.
மைக்ரோசாஃப்ட்டின் ‘பரப்புக் கணினி’யைக் கிண்டல் செய்கிறார்கள்… நன்றி: TechCrunch
Kyte.tv பற்றிக் கேள்விப்பட்டதில்லை. நோக்கியா இதில் முதலீடு செய்திருக்கிறது என்று எங்கோ படித்ததும் போய்ப் பார்த்தேன். Kyte என்ற அதன் பக்காவான மொபைல் மென்பொருளை என் மொபைலில் நிறுவிக்கொண்டேன். என்னுடைய படு சுமாரான GPRS இணைப்பிலேயே பரவாயில்லாமல் தெரிந்தது வீடியோ. ஆனால் ஸ்டாம்ப் சைஸில்.
கைட் வலையகம் மற்ற வீடியோ பகிர்வு வலையகங்களை விட நன்றாக இருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம். நோக்கியாவின் பலத்தில் கைட் மொபைல் யூட்யூப் ஆகுமா என்று பார்க்க வேண்டும்.
நான் செய்த ஸ்லைட் ஷோ…
இந்த ஃப்ளாஷ் விளையாட்டுகளில் மூளைக்கு அதிக வேலை இல்லை. ஆனால் க்ளிக் செய்வதில் டைமிங் வேண்டும். மிக அழகான கிராஃபிக்ஸ், புதுமையான கற்பனை, லோட் ஆகும் வேகம் என்று நிறைய ப்ளஸ் பாயின்ட்களை சொல்லலாம்.
சைட்டில் இரண்டு சாம்பிள்களை ட்ரை பண்ணிப் பாருங்கள்.