October 8, 2007 at 6:15 pm | இலவசம், பிசினஸ், இணைய கலாச்சாரம், கணினி, தகவல், செய்தி, வரலாறு
- ஆக்குநர்: சாத்தான் |
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 வலை உலாவியை இறக்கிக்கொள்ள விரும்புபவர்கள் (அப்படி யாராவது இருந்தால்) Windows Genuine Advantage (WGA) சோதனை எதுவும் இல்லாமல் அதை இறக்கிக்கொள்ளலாம்.
பாதுகாப்பு பிரச்சினை என்று மைக்ரோசாஃப்ட் கதை விடுகிறது. ஆனால் ஃபயர்ஃபாக்ஸின் வளர்ச்சியைப் பார்த்து பீதியடைந்துதான் பெரியண்ணன் திடீர் உபசாரம் செய்கிறார் என்பது தெளிவு.
CNET செய்தி
July 29, 2007 at 6:24 pm | செய்தி, தகவல், அரசியல், வரலாறு
- ஆக்குநர்: சாத்தான் |
பிரிட்டனில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளைப் பற்றி உளவு அமைப்பான MI5க்குத் தகவல் தர பிஷர் அல்-ராவி ஒப்புக்கொண்டார். அதற்கு நன்றிக் கடனாக எம்.ஐ.5 அவரைத் தீவிரவாதி என்று சி.ஐ.ஏ.வுக்குக் காட்டிக்கொடுத்தது. அல்-ராவி நான்கு வருடங்கள் குவான்டானமோ பே சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார்.
பயங்கரமான கதை.
July 28, 2007 at 10:07 am | செய்தி, நகைச்சுவை, வரலாறு, அறிவியல்
- ஆக்குநர்: சாத்தான் |
நீல மரணத் திரையை (Blue Screen of Death) நினைவிருக்கிறதா? ஓர் அதிபுத்திசாலி அதைப் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார்.
July 4, 2007 at 4:02 pm | தகவல், அரசியல், வரலாறு
- ஆக்குநர்: சாத்தான் |
சியரா லியோனின் குழந்தைச் சிப்பாய் ஒருவனின் சுயசரிதைக்கு விரிவான பரிந்துரை ஒன்று எழுதியிருக்கிறார் மதி கந்தசாமி (லியனார்டோ டிகாப்ரியோ, ஜிமோன் ஹூன்சூ, ஜெனிஃபர் கானலி நடித்த Blood Diamond பார்த்திருக்கிறீர்களா?). A Long Way Gone படிக்க வேண்டிய புத்தகம்.
June 11, 2007 at 5:49 pm | இணைய கலாச்சாரம், கணினி, வரலாறு
- ஆக்குநர்: சாத்தான் |
ஸ்பாமர்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட Captcha தொழில்நுட்பத்திற்கு வயதாகிவிட்டது. அதைப் பயன்படுத்திவந்த eBay, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் வேறு வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. என்கிறது இந்த சிநெட் நியூஸ் கட்டுரை.
April 19, 2007 at 3:49 pm | தத்துவம், கிண்டல், அரசியல், நகைச்சுவை, வரலாறு
- ஆக்குநர்: சாத்தான் |
புகழ்பெற்ற பெண்ணியவாதி குளோரியா ஸ்டீனம் எழுதிய இந்தக் கட்டுரை வெறும் நகைச்சுவை அல்ல.
“The truth is that, if men could menstruate, the power justifications would go on and on.”
March 6, 2007 at 5:49 pm | கலை, இலவசம், சினிமா, அரசியல், நகைச்சுவை, வரலாறு
- ஆக்குநர்: சாத்தான் |
நாஜிகளின் பிடியில் டொனால்டு டக் மாட்டிக்கொண்டு படும் பாட்டை இந்த வால்ட் டிஸ்னி அனிமேஷன் படத்தில் கண்டு களிக்கலாம்.
1943இல் நாஜிகளுக்கு எதிரான பிரச்சாரப் படம் இது. ஆஸ்கர் விருது கூட வாங்கியிருக்கிறது. எட்டு நிமிட வீடியோ. நல்ல டைம் பாஸ்.
Der Fuehrer’s Face