லிங்க்கர் | Linkr

லிங்க்குகளில் உள்ளதடா இணையம்

முகப்பு எனப்படும் டாஷ்போர்டு; உமது விட்ஜெட்கள் தெரியும் இடம்உங்கள் மொபைலானது Symbian, Windows Mobile மாதிரி ஒரு இயக்குதளத்தில் இயங்கினால், அதில் ஓரளவு நல்ல GPRS இணைப்பு இருந்தால், இந்த மென்பொருளை வைத்து ஒரு புரட்சியையே செய்துகொள்ளலாம்.

மொபைலுக்கான விட்ஜெட்களை வழங்குகிறது WidSets . விட்ஜெட்கள் எனப்படுபவை குட்டி நிரல்கள். அவற்றுக்கு விட்செட்ஸ்தான் பிளாட்ஃபார்ம் போல் இயங்குகிறது.

தேவை என்றால் இணைக்கலாம்விக்கிபீடியா, பி.பி.சி. செய்திகள், IMDB போன்ற மிகப் பிரபலமான விட்ஜெட்கள் இருக்கின்றன. இவற்றின் வேலை, அந்தந்த சைட்களிலிருந்து தகவலைக் கொண்டுவந்து தருவது. சுடோக்கு மாதிரி விளையாட்டுகளும் இருக்கின்றன. ஃப்ளிக்கரில் சில குறிச்சொற்களில் வரும் படங்களுக்கும் தனியாக விட்ஜெட்கள் உண்டு.

விட்ஜெட் டைரக்டரிவிட்ஜெட்களை செய்திகள், அரட்டை, கேளிக்கை, விளையாட்டு, இசை, வலைப்பதிவுகள் உட்பட பல வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். சாதா பட்டியல், பிரபலமானவை பட்டியல் என்று இரண்டு இருக்கின்றன. எதில் போனாலும் விட்ஜெட்டின் மேல் க்ளிக் செய்தால் விவரம் தெரியும். Pick-ஐ அழுத்தினால் உங்கள் விட்செட் முகப்பில் சேர்ந்துவிடும்.

விட்ஜெட் விவரம் காட்டும் பக்கம்இதில் ஒரு பியூட்டி, உங்கள் மொபைலில் என்னென்ன சைட் எல்லாம் பார்க்க விரும்புகிறீர்களோ, அவற்றின் RSS முகவரியை அதன் வலையகத்தில் தந்து புதிய விட்ஜெட்களை உருவாக்கலாம் (முதலில் உறுப்பினர் ஆக வேண்டும்). உருவாக்கும் வேலையை மட்டும் அவர்கள் வலையகத்தில் செய்ய வேண்டும்.

விற்செற்ஸில் ரில்பற்!அடிப்படையான பல செய்தி வலையகங்களும் வலைப்பதிவுகளும் முன்பே விட்ஜெட் ஆக்கப்பட்டிருக்கும் என்பதால் நீங்கள் புதிதாக உருவாக்கத் தேவையில்லை. புதிய விட்ஜெட்களை உருவாக்கத் இரண்டு விஷயங்கள் தேவை: 1. RSS முகவரி, 2. விட்ஜெட்டுக்கு லோகோவாக ஏதாவது ஒரு படம் (இதை ஏன் கட்டாயம் என்று தெரியவில்லை; டீபால்டு இமேஜ் எதையாவது போட வேண்டியதுதானே). விளையாட்டு, அரட்டை போன்ற விட்ஜெட்களை நான் முயற்சி செய்து பார்க்கவில்லை.

போக்குவரத்துக் கண்காணிப்புவிட்செட்ஸ் உங்கள் மொபைலில் எத்தனை கிலோபைட்/மெகாபைட் தரவை மொபைலுக்கு இறக்கியது என்ற விவரத்தை Traffic என்ற இணைப்பை அழுத்தித் தெரிந்துகொள்ளலாம். மொபைலில் அவ்வப்போது விட்ஜெட்களின் உள்ளடக்கத்தைப் புதுப்பிக்கலாம். மொபைல் பில்லைப் பற்றிக் கவலை இல்லை என்றால் 325 விட்ஜெட்கள் கூட வைத்துக்கொள்ளும் வசதி உண்டு.

ஆனால் இது தரவைச் சுருக்கித்தான் தருகிறது. இந்த புரோகிராம் எல்லாவற்றையும் சில நொடிகளில் செய்துவிடுகிறது. நல்ல மொபைல் feed reader கிடைக்காமல் அலுவலக இருக்கையில் உழல்பவர்களுக்கும் இது நல்ல தீர்வு.

இடுகைப் பட்டியல்சில பற்றாக்குறைகள் இருக்கின்றன - உதாரணமாக, More போட்டுத் தடுக்கப்படாத வலைப்பதிவுகளின் முழு இடுகைகளையும் படிக்க முடிகிறது, ஆனால் மறுமொழிகளுக்குத் தனி விட்ஜெட்களைத்தான் உருவாக்க வேண்டும். இது பீட்டா பதிப்பு. அடுத்ததில் பல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். மொபைலுக்கு இது ஒரு கொலைகாரப் பயன்பாடு (killer app) என்பதில் சந்தேகமில்லை என்று கூறி…

இது எஸ். ஆனந்த் என்பவர் எழுதிய பழைய கட்டுரை. ஆனால் இதில் இவர் அழுத்தமாகவும் அமர்க்களமாகவும் எடுத்துச் சொல்லும் விஷயங்கள் நீண்ட காலம் நிற்கும்.

அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் ஆமீர் கான் நடித்த ‘லகான்’ படத்தின் விமர்சனம் போலவும் பொதுவாக கிரிக்கெட்டின் ஜாதி அரசியல் பற்றியும் எழுதப்பட்ட மிக நீண்ட கட்டுரை. ஆனந்த் அவுட்லுக் பத்திரிகையில் வேலை பார்க்கிறார்.

கட்டுரையில் ஆங்காங்கே பல சாட்டையடிகளைப் பார்க்கலாம். உதாரணமாக -

A ‘liberal-secular’ newspaper which has no qualms calling itself The Hindu…

Just brilliant!

மதுரையின் பாரம்பரியமிக்க ‘பர்ஸ் விளையாட்டு’ அழிந்துபட்ட கண்ணீர்க் கதையினைக் கேளீர்.

இந்த ஃப்ளாஷ் விளையாட்டுகளில் மூளைக்கு அதிக வேலை இல்லை. ஆனால் க்ளிக் செய்வதில் டைமிங் வேண்டும். மிக அழகான கிராஃபிக்ஸ், புதுமையான கற்பனை, லோட் ஆகும் வேகம் என்று நிறைய ப்ளஸ் பாயின்ட்களை சொல்லலாம்.

சைட்டில் இரண்டு சாம்பிள்களை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

The Snowrider
Bauns